Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஆடு மேய்க்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராமலிங்கம் மன உளைச்சலில் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |