வாலிபர் மது போதையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் கபீர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த கபீர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த கபீர் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.