Categories
உலக செய்திகள்

அடகடவுளே….! நம்மை இவர்கள் ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை…. இம்ரான் கான் ஆவேசம்….!!!

மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன் பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் “காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனத்தில் தோற்றுவிட்டோம். இதனால் எந்தவித தாக்கத்தையும் நாம் ஏற்படுத்தவில்லை.

இதனை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை. இதற்கு நாம் பிரிந்து உள்ளம் என்பதை பல நாடுகள் (இந்தியா, இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள்) தெரிந்து வைத்திருகிறது. நாம் (இஸ்லாமியர்கள்) 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறோம். ஆனாலும் அநீதியை தடுக்க நமது குரல் போதுமானதாக  இல்லை.

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டம் 370 இந்தியா ரத்து செய்ததில் எந்தவித அழுத்தத்தையும் உணரவில்லை. நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று இந்தியா நினைத்து விட்டது. காஷ்மீரில் இந்தியா வெளி நாடினரை அழைத்து வந்து அங்குள்ள மக்கள் தொகையை மாற்றி வருகிறது. இதுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏனென்றால் எந்தவித தாக்கத்தையும் செய்யாதவர்கள் நாம் என்று இந்தியா நினைத்து உள்ளது” என்று கூறியுள்ளார்

Categories

Tech |