சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, எஸ்.சவுந்தர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கிறது. தற்போது 14 பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories