வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, காட்பாடி பகுதியில் இருந்து அதிகளவு ஆட்டோக்கள் இயக்கப் படுகின்றன. இதையடுத்து ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டு மொத்த ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் பாதிக்கிறது.
எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை வழங்கலாம் எனவும், இப்படி செய்வதால், இரவு நேர ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
இதையடுத்து இரவு நேரங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நள்ளிரவில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.