மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வைத்து சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் மையம் சார்பில் விடுதி மாணவர்-மாணவிகளுக்காக வாழ்க்கை வழிகாட்டி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் அலுவலர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பல் பொருள் அறிவியல் துறை உதவி பேராசிரியர் குணசேகரன், திரு.வி.க அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒவ்வொருவரும் தன் இளமைக்காலத்தில் கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் என பல கனவுகள் இருக்கும். நமது கனவினை நோக்கிய பயணிக்கும் பாதைக்கு பல சந்தேகம், கேள்விகளுக்கு தீர்வுகளை அடைவதற்கான வழிமுறைகள் பல உள்ளது. எனவே உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உங்கள் தேடலை பொறுத்தே இருக்கிறது. மேலும் உங்கள் பெற்றோர் உங்கள் மீது வைத்த முழு நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற கடமை பட்டவர்களாக இருக்க வேண்டுமெனவும், தினசரி நாளிதழ் வாசிக்க வேண்டும். மேலும் கல்வியை மட்டுமே உங்களுடைய முழு நோக்கமாகக் கொண்டு உங்கள் கடமையை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.