ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புடினின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதியின் ஆலோசகர் கடந்த 1990 காலகட்டங்களில் ரஷ்ய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்த நபர்களில் முக்கியமானவர். அதிபர் விளாடிமிர் புடினின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தவர்.
மேலும், சமீபத்தில் மரணமடைந்த, பொருளாதார நிபுணர் யெகோர் கைடார் குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர், தெரிவித்திருந்ததாவது, என்னை விட ரஷ்யா சந்திக்கும் ஆபத்துக்களை சரியாக கணித்திருந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அதனை விமர்சிக்கும் உள்நாட்டு மக்களை கடுமையாக எதிர்த்தது.
சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்களிடையே பேசிய போது, தங்களின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக விமர்சிக்கும் மக்கள் தேசத்துரோகிகள் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ், தன் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.