மருதாணி இலையில் இருக்கும் மருத்துவ பலன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.. பொதுவாக நல்ல மணமும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. மருதாணி இலை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு மருதாணி மற்றும் மருது, வங்கி, ஜனாஇலை, ஐவனம், அழவணம் ,போன்ற பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயண் கொண்டவை.
1. மருதாணி இலைகளை மை போல் அரைத்து அடை போல் தட்டையாக தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு இருபத்தி ஒரு நாட்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வர வேண்டும் இதனால் இளநரை மாறுவதுடன், கண்கள் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும்.
2 . புதிதாக செய்த மருதாணி இலை சாற்றை 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும் . இதனை தொடர்ந்து 10 நாட்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும் .மருதாணி இலைகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை கால் நகங்களின் மீது வைத்து காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கை கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தை ஆவது அழுக்குடன் பலபலப்பில்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயும் தடுக்கப்படும்.
3. மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாக்கும். மருதாணியை ஒரு குவளை நீரிலிட்டு ஊற வைக்கவேண்டும் ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரை கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும் .இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய் புண் மற்றும் தொண்டை புண் குணமாகும்