ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஷேக் அப்துல்லா என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஐமாத் சபை தலைவர் சிம்லா நஜிப், வாலன்அக்பர், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக் இப்ராகிம், பக்கீர் மைதீன், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ரியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் காதர் பாட்சா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் குலாம் உசேன், நேஷனல் வுமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மாவட்ட தலைவி ஷாஜிரா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.