Categories
மாநில செய்திகள்

அடடே… பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தூய்மைப் பணியாளர்… என்ன சப்ஜெக்ட் தெரியுமா…?

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி தூய்மைப் பணியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாத்துரை தூய்மை  பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து காசுகள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்ற நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைத்திருக்கிறார்.

அப்போது நாணயங்களை பார்வையிட்ட மாணவர்களுக்கு பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் இருந்து நாணயங்கள் வடிவமைக்கப்பட்ட பரிமாணங்கள் குறித்து, பண்டைய கால நாணயங்கள் மன்னர் காலத்தில் வெளிநாட்டு நாணயங்கள் ரூபாய் மற்றும் மதிப்புகளைப் பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவர்கள் நாணயங்களை கையிலெடுத்து ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில்  ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |