Categories
மாநில செய்திகள்

மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய  6 பேர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 6 பேருகும்  விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி கட்டாயப்படுத்தி உள்ளன.
இதற்கு, அந்த சிறுமியின் தாய் மறுப்பு தெரிவிக்கவே தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை பலமாக தாக்கி உள்ளன. மேலும் கத்தியாலும் மற்ற ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த அந்தப் பெண்ணும் சிறுமியும்  கான்பூரில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாய் உயிரிழந்தார். குற்றவாளிகள் 3 பேரை மீண்டும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றவர்களை  வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |