Categories
தேனி மாவட்ட செய்திகள்

தனியார் மயமாக்கக்கூடாது…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

வருகின்ற 28, 29ஆம் தேதியில் மத்திய தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் தர்மர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |