Categories
சினிமா

“முதல்வருக்கு போன் பண்ணின ரஜினி”… ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர்… எதுக்குன்னு தெரியுமா…???

முதல்வருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் அனைவரிடமும் சமமாக நட்பு பாராட்டுபவர். இந்நிலையில் ரஜினி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு போன் செய்து ஸ்டாலினின் சுயசரிதை நூலான “உங்களின் ஒருவன்” புத்தகத்தை படித்து அவரை பாராட்டியுள்ளார் ரஜினி.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் பகிர்ந்துள்ளதாவது, “உங்களில் ஒருவன்” படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்வின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |