Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற துறைகளில் தங்களது கருத்துகளை  தெரிவிக்க வேண்டும்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்களின் பெயர், ஊர், வட்டம்  ஆகியவற்றை காலை 10 மணிக்குள் கணினியில் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து  விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னர் கூட்டத்தில்  அளிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |