பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை நாட்டை உலுக்கி வருவதால் பொருட்களின் விலையும், வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது. மேலும் டீசல் கிடைக்காததாலும் மற்றும் பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள். மேலும் பால், ரொட்டிக்கு கூட அவர்கள் தவியாய், தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் நாணய மதிப்பானது மேலும் சரிந்துள்ளது. இதையடுத்து டாலருக்கு நிகரான இலங்கை நாணய மதிப்பு 280-ஆக சரிந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.