விவசாயி வீட்டில் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வெண்ணிமலை தோப்பு 4-வது தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த ஜெயராஜ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெயபால் வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விவசாயி வீட்டில் புகுந்த 8 அடி நீள சாரைப்பம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.