வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா தொட்டி நாகையா தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரிஹரன் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரிஹரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.