குப்பைகளை எரிக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கிருஷ்ணசாமி -ஜெய லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டிற்கு முன்பு இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்துள்ளார். அப்போது ஜெயலட்சுமியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென தீ உடல் முழுவதும் பரவியது.
இதனால் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.