Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தாளமுத்துநகர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆரோக்கியபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் லூர்தம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் பின்லேடன் மற்றும் எபனேசர் என்பதும், மேலும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும்  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |