Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தையமா…? வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வாலிபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென்காசியை சேர்ந்த சுலைமான், ஷேக்மைதீன், முகமது ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |