பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் சலவை தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திரவியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரெட்டை குளத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது திரவியம் கடன் தொல்லை காரணமாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.