நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ரோடு பகுதியில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சத்யநாராயணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சத்யநாராயணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.