ராதிகா சரத்குமார் தற்போது வெப் தொடரில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா சினிமா துறையில் இருந்து சின்னத்திரையில் கொடிகட்டி வந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் களமிறங்க உள்ளார். இந்த வெப் தொடருக்கு கார்மேகம் என்று பெயரிடப்பட்டு அதில் சாய்குமார், துளசி, சைதன்யா கிருஷ்ணா, சாந்தினி சவுத்ரி, சரண்யா பிரதீப், நந்தினி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த வெப் சீரிஸானது தமிழ் மற்றும் தெலுங்கு என ZEE5 ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.