Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி டிக்கெட் கேன்சல் செய்தாலும்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!!!

டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும்  கோடி கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. பல நேரங்களில் அவசர நிலை காரணமாக ரயில் சார்ட் தயாரிக்க பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை உங்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான பணம் கிடைக்காமல் போகிறது. இது நிறைய பேருக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் ரீஃபண்ட் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்  ரத்து செய்தாலும் ரீஃபண்ட் திரும்பப் பெறலாம். இதுபற்றி ஐ ஆர் டி சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இந்திய ரயில்வே பயணம் செய்யலாம் அல்லது பகுதியில் உபத்திரம் செய்யாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்த பணத்தைத் திருப்பித் தருவதாக கூறி உள்ளது. இதற்கு ரயில்வே விதிகளின்படி டெபாசிட் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் அதை செய்வதற்கு முதலில் ஐ ஆர் டி சி அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.irctc.co.in முகவரிக்கு  செல்ல வேண்டும்இப்போது முகப்புப் பக்கத்திற்குச் சென்று ’My account’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்ததாக, கீழ்தோன்றும் மெனுவிற்குச் சென்று, ’My transaction’ என்பதைக் கிளிக் செய்யவும்.

இங்கே நீங்கள் TDR ஆப்சனை பார்க்கலாம். யாருடைய பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் பார்க்கலாம்.

இப்போது உங்கள் PNR நம்பர், ரயில் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்பி, கேன்சல் விதிகளின் பாக்ஸில் டிக் செய்து ‘submit’ கொடுக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, மொபைல் எண்ணுக்கு OTP அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

PNR விவரங்களைச் சரிபார்த்து, டிக்கெட்டை சேன்சல் செய்யும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அங்கேயே ரீஃபண்ட் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இதுகுறித்த தகவலும் மொபைல் நம்பருக்கு SMS மூலமாக அனுப்பப்படும்.

Categories

Tech |