Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வெற்றியைப் பதிவுசெய்த பெண் …!!

பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு புலம்பெயர்ந்தவர் நீதா கன்வர். 2001ஆம் ஆண்டு கல்வி கற்பதற்காக அவர் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தார். 36 வயதான அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.

அஜ்மரில் உள்ள சோபியா கல்லூரியில் 2005ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், 2011ஆம் ஆண்டு பூன்யா பிரதாப் கரணை திருமணம் செய்துகொண்டார். இந்தியரை திருமணம் செய்தபோதிலும் எட்டு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகே தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்ததாக அவர் தெரிவித்தார். நீதாவுடன் அவர் சகோதரியும் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளார். அவர் தற்போது ஜோத்பூரில் வாழ்ந்துவருகிறார்.

Categories

Tech |