விருச்சிகம் ராசி அன்பர்களே…! குடும்பத்தோடு செல்லும் சுற்றுலா இனிமையைக் கொடுக்கும்.
அனைத்து விதத்திலும் நன்மை ஏற்படும். எதிர்பாராத நல்ல விஷயம் உங்களை தேடி வரும். நீண்ட தூர பயணம் செல்ல வேண்டி இருக்கும். இரவு கண் விழிக்கும் சூழல் அமையும். வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் வேண்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை சரியாகும். குழந்தைகளின் எதிர்கால நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். பொருட்கள் மீது கவனம் கொள்ளுங்கள். விருச்சிகம் ராசி காரர்கள் ஏனோதானோ வாக எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் கட்டாயம் பொறுமை காக்க வேண்டும். மாணவ கண்மணிகளுக்கு சுமூகமான சூழல் அமையும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் இரண்டு.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.