ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பின் நாட்டில் உள்ள பல பெரிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறது. சமீபத்தில் பல்வேறு வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி போன்ற வங்கிகள் இதில் அடங்கும். இந்த வரிகள் மூத்த குடி மக்களுக்காக FD திட்டங்களுக்கு கூடுதல் வட்டி வழங்குகிறது.
அந்த வகையில் முன்னணி வங்கிகளின் இரண்டு சிறப்பு FD திட்டங்கள் இம்மாத இறுதியில் அதாவது மார்ச் 31-ஆம் தேதி காலாவதி ஆகின்றன. எனவே நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்மார்ச் 31க்குள் இணைப்பது நல்லதாகும். தனியார் வங்கியாக எச்டிஎப்சி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD சலுகையின் கீழ் சீரப்பள்ளி0.75% கூடுதல் வட்டியை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு FD மீதான கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதி ஆகும்.பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு FD திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 7 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை ரூ.2 கோடிக்கும் குறைவான FD திட்டங்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது. இது மட்டுமின்றி, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு கூடுதலாக 0.65 சதவீத வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
தற்போதைய காலத்தில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் மக்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர். ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் உத்தரவாதத்துடன் நிலையான லாபம் கிடைக்கிறது. எனவே ரிஸ்க்கே இல்லாமல் லாபத்தை விரும்புபவர்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். FD திட்டங்களில் முதலீடுகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் இருக்கிறது.