நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது.
இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் நேர்ந்துவிட்டால் அவரது பிரபலங்கள் அந்த நாமினிக்கு கிடைக்கும். எனவே நாமினி பெயரை பிஎஃப் கணக்கில் இணைக்காவிட்டால் இழப்பு ஏற்படும். உறுப்பினர்களுக்கு தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 7 லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கிறது.
இந்த பணம் உறுப்பினர்களின் நாமினிக்கு வழங்கப்படுகிறது. ஒருவேளை பிஎஃப் உறுப்பினர் தனது கணக்கில் நாமினி பெயரை சேர்க்காமலேயே துரதிர்ஷ்டவசமாக இருந்துவிட்டால் ரூபாய் 7 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே பிஎஃப் கணக்கில் நாமினி பெயரை சேர்ப்பது மிகவும் அவசியமாகும். அதேபோல் பிஎப் கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்று பார்ப்பதற்கு நாமினி பெயரை இணைத்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பேலன்ஸ் பார்க்க முடியாது.
https://www.epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று நாமினியை அப்டேட் செய்யலாம்.