சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கையை படித்திருக்கிறார். அதில் அவர் பொது வெளியிலும் தேர்தல் சமயத்திலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அதனை நிறைவேற்றுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என கூறியுள்ளார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது எனவும் ஒரு பத்து மாத குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்து கேட்டால் அதற்கு என்ன தெரியும் எனவும் பேசியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சு தற்போது விவாதப் பொருளாக ஆகியுள்ளது. ஸ்டாலினின் கூற்றுபடி எந்த ஒரு ஆட்சி நிறைவு பெறும் போதும் அதன் வயது 60 மாதங்களாகத்தான் இருக்கும். அப்படி பார்த்தால் ஐந்து வருடம் முடிந்த பிறகும் ஏன் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கேட்கும் பட்சத்தில் ஐந்து வயது குழந்தையிடம் இவ்வாறு கேட்கலாமா.? என ஸ்டாலின் கேட்பார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
தேர்தல் சமயத்தில் மொத்தம் 505 வாக்குறுதிகள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் மேலும் ஒரு வாக்குறுதியை கூடுதலாக கொடுத்துள்ளார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் சொன்னபடி நடக்காமல் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என மக்களை ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார். தொடர்ந்து கல்வி கடன் ரத்து போன்ற பல்வேறு வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக கலந்து விட்டன. இந்நிலையில் ஸ்டாலின் இந்த பேச்சு திமுக கொடுத்த வாக்குறுதிகள் வரும் ஆனா வராது என்பது போல் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.