மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திராணியின் 2-வது மகன் ஸ்பவின் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திராணி ஸ்பவினை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு ஸ்பவினை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திராணி குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து ஸ்பெவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திராணி குளச்சல் காவல் நிலையத்தில் மீண்டும் இணையதளம் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் ஒரு சுய உதவி குழுவில் தலைவியாக இருந்து வருவதாகவும், அதற்காக ஒரு தனியார் நிறுவனத்தில் 8,26,468 கடன் பெற்றுள்ளேன்.
இதற்காக மாதந்தோறும் தவணையும் செலுத்தி வருகிறேன். இதனையடுத்து கடந்த 22-ஆம் தேதி நிதி நிறுவன ஊழியர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தவணையை உடனடியாக கட்ட வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் கூடிய விரைவில் கட்டுகிறேன் என்று கூறினேன். ஆனால் நிதிநிறுவன ஊழியர்கள் மறுநாள் சுய உதவி குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசினார். இதைப்பார்த்து பயந்த எனது மகன் ஸ்பவின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். எனது மகன் தற்கொலைக்கு செய்து கொண்டதற்கு நிதிநிறுவனம் தான் காரணம். எனவே நிதி நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.