ட்ரோன் இயக்கத்திற்கான புதிய செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ட்ரோன் தயாரிப்பு மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. இப்போது ட்ரோன் இயக்கத்திற்கான செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் அஸ்டீரியா அறிமுகம் செய்து உள்ளது.
மேலும் வேளாண்மை, களஆய்வு, தொழிலக ஆய்வுகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பல தொழில் பிரிவுகளுக்கு தீர்வு வழங்குவதற்கான அடிப்படை மென்பொருளாக ஸ்கைடெக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ட்ரோன் மேலாண்ம, டிரோன் பயண சேவை திட்டமிடுதல் மற்றும் செயலாக்குதல், தரவு செயல்முறை, சேமிக்கப்படும் வான்வழி தரவுகள் மீது, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு போன்றவற்றிற்கு ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை இந்த செயல்தளம் வழங்குகிறது. அத்துடன் இயக்க செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் இது உறுதி செய்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.