நேற்று மாலை சென்னையில் இருந்து துபாய் சென்றடைந்த முதல்வர் முக ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கண்காட்சி முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு, புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் துபாய் புறப்பட்ட அவர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி அளவில் அங்கு சென்று அடைந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் வழியனுப்பி வைத்தனர். இதில் முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட 15 அரசு அதிகாரிகள் தனி விமானத்தில் சென்று உள்ளனர்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை நேற்று துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய அமீரகத்துக்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, அரசு உயர் அலுவலர்கள் இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை ஆகியோர் வரவேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஏராளமான திமுகவினர், தமிழர்கள், அரசு அதிகாரிகளும் உற்சாகமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.அதன்பின் துபாய் அரசு ஏற்பாடு செய்த காரில் முதல்வர் முக ஸ்டாலின் அவர் தங்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு துபாயில் அவர் தங்கியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சி தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு வாரமாக மார்ச் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த அரங்கை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கும். இதில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அவர் சந்தித்து பேசுகிறார்.
அதன்பின் அவர் அபுதாபி சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த இரு நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார். முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய நான்காவது நாள் பயணத்தை முடித்து 29ம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.