14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. அதன்பின் இந்த வேலை நிறுத்தம் குறித்து எஃகு, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ரயில்வே மற்றும் பாதுக்கப்புத்துறையிலுள்ள ஊழியர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது