Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் வளர்க்க வேண்டும்…. நடைபெறும் பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்  முகாம் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், சந்தானராமசாமி கோவில் வளாகத்தில் வைத்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்  நடைபெறுகிறது.

இதில் நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் நட்டு அவற்றை வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் 5 நாள் பயிற்சி முடிந்த பிறகு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |