Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே கேப்டன் ஆனார் ஜடேஜா…. அப்போ தோனிக்கு இதுதான் வேலையா?!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் ஒரு வீரராக மட்டுமே மகேந்திர சிங் தோனி அணியில் நீடிப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. எனவே இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இதனால் கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ஜடேஜா தோனியின் ஆலோசனை கேட்டு களத்தில் செயல்படவும் வாய்ப்புள்ளது.

Categories

Tech |