நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. சிஎஸ்கேவுக்கு 2008ஆம் ஆண்டு முதல் தோனி கேப்டனாக இருந்து வருகிறார். இதற்கிடையே சிஎஸ்கே 2 வருடங்கள் தடை செய்யப்பட்டபோது தோனி புனே அணிக்காக விளையாட களமிறங்கினார். சிஎஸ்கே கேப்டனாக தோனி பல சாதனைகளை படைத்துள்ளார்.
வார்னே சாதனை முறியடிப்பு :-
ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் முதல் சீசனில் கோப்பை வென்றது. ஷேன் வார்னேவுக்கு அப்போது 39 வயது இருக்கும். எனவே 13ஆவது சீசன்வரை அதிக வயதில் ஐபிஎலில் கோப்பை வென்ற கேப்டனாக ஷேன் வார்னே இருந்தார். ஆனால் தன்னுடைய 40 வயதில் தோனி 14ஆவது சீசனில் சிஎஸ்கேவுக்கு கோப்பை வென்று கொடுத்து வார்னேவின் சாதனையை முறியடித்தார்.
பிளே ஆஃப் :-
13ஆவது சீசனில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. சிஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு மற்ற அனைத்து முறையும் முன்னேறி அதிகமுறை பிளே ஆஃப் சென்ற அணியாக உள்ளது. தொடர்ந்து இவ்வாறு பிளே ஆஃப் சென்றதற்கு கேப்டன் தோனிதான் முக்கிய காரணம். ஏனென்றால், போட்டியை இறுதிவரை கொண்டு சென்று பலமுறை வெற்றியைப் பெற்றுக்கொடுத்து தோனி பெஸ்ட் பினிஷராக உள்ளார். தோனி கடைசி ஓவர்களில் மட்டும் 50 சிக்ஸர்க்ள அடித்து, கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.
6 கோப்பைகள் :-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து மகேந்திரசிங் தோனி 6 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎலில் 4 கோப்பைகள், தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டு கோப்பைகள் வென்று கொடுத்துள்ளார்.