Categories
மாநில செய்திகள்

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்விற்க்கான  வினாத்தாள் கட்டுகள் பஸ்ஸில் எடுத்து வர தடைவிதித்து  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல்  இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு வகை வினாத்தாள் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

அவற்றில் எந்த வினாத்தாள்களை வழங்க வேண்டும் என தேர்வு நாளன்று காலையில் முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவெடுப்பார்கள். மேலும் வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையத்தில் இருந்து எடுத்து செல்ல பள்ளி தலைமையாசிரியர் வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். எடுத்துவரும் நபரின் விபரம், எடுக்கும் நேரம், பள்ளிக்கு வந்து சேரும் நேரம், மாணவர்களுக்கு வழங்கிய நேரம் போன்றவற்றை தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் உரியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் பள்ளிகளில் தவறுகள் ஏற்பட்டால் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

வினாத்தாள்களின் அனைத்து பக்கங்களிலும் அறை கண்காணிப்பாளர்கள் கையொப்பமிட வேண்டும். அனைத்து விடைத்தாள்கள் பள்ளி அளவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களால்  மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்ட தேர்வு வினாத்தாள் கட்டுகள் வேறு பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது இந்த தேர்வில் அந்த நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது.

Categories

Tech |