சிறுமி ஒருவர் தன்னந்தனியாக தனி விமானத்தில் உலகை சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி தனி ஆளாக தனி விமானத்தில் உலகை சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனி ஆளாக உலகை சுற்றி சாதனை படைத்த சாரா ரூதர்போரட் என்பவருடைய தங்கையான மேக் ரூதர்போரட் தான் தற்போது இந்த சாதனையில் ஈடுப்பட உள்ளார்.
மேலும் மேக் ரூதர்போரட் பல்கேரியா நாட்டில் இருந்து தனி விமானத்தில் தன்னந்தனியாக ஆப்ரிக்கா நாடுகள் வழியாக உலகை சுற்றி விட்டு வரும் ஜூலை மாதம் 19ஆம் தேதி மீண்டும் பல்கேரியாவுக்கு வந்து தன்னுடைய பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.