தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கடலூரில் அளித்துள்ள பேட்டியில்,பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் துறையை ஏற்படுத்த நீண்ட நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். பொது விநியோகத் திட்டம் ஒரு துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென முதல்வர் அறிவித்திருந்தார்.
இதை நிறைவேற்ற வேண்டும் 2010 முதல் அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் ரேஷன் கடை பணியாளர் களுக்கும் 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். மேலும் சரியான விலையில் பொருட்களைத் தானமாக வழங்க வேண்டும் போன்ற 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மார்ச் 3ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.
ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் திருச்சியில் வரும் எட்டாம் தேதி கருப்பு உடை அணிந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.