நடிகை கௌதமியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகை கௌதமி சென்னையில் உள்ள கோட்டையூர் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 34.88 லட்ச ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டி அதற்காக 9.14 லட்சம் வருமான வரியாக கட்டியுள்ளார். ஆனால் வருமான வரித்துறை 11.47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று மதிப்பீட்டு ஆணை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை கௌதம்யின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து நடிகை கௌதமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூலதன வரியிலிருந்து 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும், அதன்பிறகு முடக்கப்பட்ட 6 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை விடுவிக்குமாறு தீர்ப்பளித்தார். மேலும் 4 வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.