Categories
சென்னை மாவட்ட செய்திகள்

HDFC பெயரில் போலி காசோலை…. ரூ.4.90 கோடியை அடிக்க திட்டம்…. 5 பேர் கைது….!!

போலி காசோலை தயார் செய்து  வங்கியில் ரூ.4.90 கோடி பணம் எடுக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எச்.டி.எப்.சி.வங்கி  சீனியர் மேலாளர் கல்யாண் கிருஷ்ணன் நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து புகார்  மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், எங்கள் வங்கியின் பெயரில் போலி காசோலை தயார் செய்த மோசடி நபர்கள், அந்த காசோலையை வைத்து சாலிகிராமத்தில் உள்ள எங்கள் கிளைக்கு சென்று பிரபல கம்பெனி வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ரூ.4.90 கோடிபணத்தை எடுக்க, முயற்சி செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க  மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி  இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில், மோசடி கும்பலைச் சேர்ந்த சென்னை பெரியார் நகரில்  வசித்து வரும் கலைமாறன்,கொளத்தூரில் வசித்து வரும்  லியோலாரன்ஸ்,வியாசர்பாடியில் வசிக்கும் அந்தோணி சேசுராஜ், திருநின்றவூர் திருமலைபெரியகுளத்தில் வசிக்கும் ராஜ்குமார் ஆகியோரை  காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ராஜ்குமார் தான்  வழக்கின் முக்கிய குற்றவாளி என்று  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |