இந்திய நாட்டில் போர்க் கப்பல்கள், ஹெலி காப்டர்கள், ராணுவபோர் வாகனங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் உள்ளிட்டவற்றின் 107 உதிரிபாகங்கள், துணைகருவிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடைவிதிக்க ராணுவம் அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியது.
வரும் டிசம்பர் முதல் 2028-ஆம் வருடம் டிசம்பர் மாதம்வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும்.
இப்பொருட்கள் இந்திய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடையும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 2 ஆயிரத்து 851 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து கடந்த வருடம் டிசம்பர் 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.