இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் விளக்கு பகுதியில் சசிகுமார் -முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தங்கள் குடும்பத்துடன் மதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று திரும்பி வந்த சசிகுமாரின் குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் . இதுகுறித்து சசிகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.