Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசலை தொடர்ந்து… சிஎன்ஜி எரிவாயு விலை உயர்வு…!!!!!

பெட்ரோல் மற்றும்  டீசலின்  விலை தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின்  விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு உபயோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சி.என்.ஜி.யை சில்லரையாக வினியோகிக்கும் இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம், அதன் விலையை கிலோ ரூ.58.01-ல் இருந்து ரூ.59.01-ஆக உயர்த்தி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சி.என்.ஜி. விலை 3 தடவை உயர்த்தப்பட்டுள்ளது. குழாய் வழி சமையல் எரிவாயு விலை, கனமீட்டருக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.

Categories

Tech |