இருந்திராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் இருந்திராபட்டியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை ஆரம்பித்து வைத்தார். இக்கண்காட்சியில் மாணவர்கள் அறிவியல் சார்ந்த மாதிரிகளை தயார் செய்து தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.
மேலும் கண்காட்சியில் வைத்திருந்த மாதிரிகளை பார்க்க வந்த பார்வையாளருக்கு மாணவர்கள் விளக்கத்துடன் பதிலளித்தனர். இதனால் பார்வையாளர்கள் அனைவரும் மாணவர்களை பாராட்டியுள்ளனர். இக்கண்காட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளூர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.