Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட சிறுமி…. பாம்பை அடிக்க வீட்டுக்குள் சென்று… அத்துமீற நினைத்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் தச்சம்பட்டியை சேர்ந்தவர்  தொழிலாளி செல்வராஜ்(38). இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு சிறுமியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனால் சிறுமி சத்தம் போட்டதால் பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை செல்வராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து உடனே சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தார்.

Categories

Tech |