டாக்டர் வீட்டிற்குள் புகுந்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையின் டீனாக இருக்கிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகள், 6 பித்தளை விளக்குகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.