Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் புது காலனியில் கட்டிட தொழிலாளியான திவாகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் குடிபோதையில் திவாகர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அப்போது திவாகர் அந்த பெண்ணின் வாயை மூடி எனது ஆசைக்கு இணங்கு எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றுள்ளனர். அதற்குள் திவாகர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |