Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!…. சென்னை போரூர்-பூந்தமல்லி ரூட் அப்டேட்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

சென்னை போரூர்-பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. போரூர் சிவன் கோவிலில் இருந்து குமணன்சாவடி செல்லும் கனரக வாகனங்கள் பைபாஸ் வழியாக வேலப்பன்சாவடி சென்று போக வேண்டும். இது குமணன்சாவடியில் இருந்து போரூர் வரும் கனரக வாகனங்களுக்கும் பொருந்தும்.

இதற்கிடையில் சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து குமணன் சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில் இலகுரக வாகனங்கள் செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆம்புலன்ஸ்களுக்கு விலக்குஅளித்து அந்த வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

Categories

Tech |