லாஸ்லியா குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இதனை வீடியோ பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CbfMXpbpjea/